சீனத் தேசிய அந்நிய செலாவணி நிர்வாகம் ஜூலை 7ஆம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டின் ஜுன் திங்கள் இறுதிவரை, சீனாவின் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை 3 லட்சத்து 31 ஆயிரத்து 740 கோடி அமெரிக்க டாலரை எட்டி, மே மாதத்தில் இருந்ததை விட 0.98 விழுக்காடை அதிகரித்து, 3 ஆயிரத்து 220 கோடி அமெரிக்க டாலரை எட்டியது.
இதுவரை, சீனாவில் அன்னிய செலாவணி கையிருப்பு தொகை கடந்த 19 மாதங்களாக 3 லட்சத்து 20 ஆயிரம் கோடி அமெரிக்க டாலருக்கு மேல் நிலைநிறுத்தப்பட்டு, தொடர்ச்சியாக 6 மாதங்களாக அதிகரிப்பு அடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.