தான் வாழ்ந்த காலம் மட்டுமல்லாது, இறந்து பல ஆண்டுகளாகியும் பல்வேறு தரப்பால் உச்சரிக்கப்படும் பெயராக தந்தை பெரியார் உள்ளது.
தந்தை பெரியார் என்ற பெயருடன் அழைக்கப்படும் ஈ.வெ. ராமசாமியின் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆண்டுதோறும் சமூக நீதி நாளாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.
பெரியாருக்கு முன்பே தமிழ்நாட்டில் சாதிய அடக்குமுறைகள், பெண் சுதந்திரம் போன்றவற்றை சிலர் பேசியிருந்தாலும், பெரியார் தனது பேச்சுக்கள் மூலம் இவற்றுக்கு எதிராக நிகழ்த்திய சாதனைகள் ஏராளம்.
இந்து மாதத்தில் உள்ள சாதிய படிநிலைகளை தொடர்ந்து எதிர்த்து வந்த பெரியார், சாதிய படிநிலைகளில் கீழ் மட்டத்தில் இருப்பவர்களை சுரண்ட பார்ப்பனியர்கள் சனாதன தர்மத்தை பயன்படுத்துவதாகவும் தொடர்ந்து விமர்சித்தார்.
தந்தை பெரியாரின் 146வது பிறந்த தினம் இன்று
