சீன நீர் மின்சார மற்றும் நீர் வளத் திட்ட வரைவுக் கழகம் வெளியிட்ட பம்ப் செய்யப்பட்ட நீர்மின்சார சேமிப்புத் தொழிலின் 2024ஆம் ஆண்டு அறிக்கையின்படி, 2024ஆம் ஆண்டின் இறுதி வரை சீனாவில் பம்ப் செய்யப்பட்ட நீர்மின்சார சேமிப்புத் திறன் 5 கோடியே 86 இலட்சத்து 90 ஆயிரம் மெகாவாட் அடைந்துள்ளது. இந்தத் துறையில் சீனா தொடர்ந்து 9 ஆண்டுகளாக உலகளவில் முதலிடம் வகிக்கின்றது. சீனாவுக்கு அடுத்து ஜப்பான், அமெரிக்கா ஆகியவை முறையே 2ஆம் மற்றும் 3ஆம் இடத்தில் உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, உலக எரியாற்றல் துறையில் பசுமையான குறைந்த – கார்பன் மேம்பாட்டுப் போக்கு வேகமாக விரிவாகி வருகின்றது. காற்றாற்றல் மின்சாரம், ஒளிவோல்ட்டா மின்கலம் ஆகிவற்றைப் பிரதிநிதியாகக் கொண்ட புதிய எரியாற்றல்கள் பெருமளவில் வளர்ந்து வருகின்றன. மின்சாரத் துறையில் கார்பன் பயன்பாடு தெளிவாகக் குறைக்கப்பட்டுள்ளது.
புதிய எரியாற்றலின் தீவிர வளர்ச்சிக்கும் புதிய வகை மின்சார அமைப்புகளின் கட்டுமானத்துக்கும் பம்ப் செய்யப்பட்ட நீர்மின்சார சேமிப்பு முக்கிய தொழில் நுட்ப ஆதரவு வழங்கும் என்று சீன நீர் மின்சார மற்றும் நீர் வளத் திட்ட வரைவுக் கழகத்தின் துணைத் தலைவர் சாவ் செங்மே தெரிவித்தார்.