சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் திறன் மிக்கவர் தேர்வு முறை

Estimated read time 0 min read

பொதுவாக தெரிந்த பாரம்பரிய திறன் மிக்கவர்கள் தேர்வு முறையானது அனுபவங்களைச் சார்ந்திருந்தது. ஆனால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இந்த வழக்கமான முறையிலிருந்து விலகி, அடிமட்ட பணி களத்தில் உண்மையான சாதனைகளின்படி திறன் மிக்கவர்களைத் தேர்ந்தெடுக்கும் புதுமையான முறையை உருவாக்கியுள்ளது. இம்முறைக்கான விசுவாசம், தூய்மை, பொறுப்புணர்வு ஆகிய மூன்று வரையறைகள், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் திறன் மிக்கவர் தேர்வுக்கான அளவுகோலாகும்.

விசுவாசமானது, உறுதியான நம்பிக்கை மற்றும் ஆரம்பக் குறிக்கோளுடன் கட்சி மற்றும் மக்களின் அடிப்படை நலன்களை முதலிடம் வைப்பதாகும். தூய்மையானது, கட்சியின் ஒழுங்குமுறையைப் பின்பற்றி, சுயநலமின்றி நேர்மையுடன் பொறுப்பேற்று செயல்படுவதாகும். பொறுப்புணர்வானது, சொந்த பொறுப்பை முழு மனதுடன் நிறைவேற்றி, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம் பொது மக்களின் இன்னல்களைச் சமாளிப்பதாகும்.

தேசிய மறுமலர்ச்சிக்குப் பொறுப்பேற்க கூடிய உயர்தரமான ஊழியர் குழுவை உருவாக்குவது, கட்சியின் ஆக்கப்பணி பற்றிய ஷிச்சின்பிங் சிந்தனையின் முக்கிய அம்சமாகும். இந்த குறிக்கோளை நனவாக்க, ஊழியர்களின் தேர்வு, வளர்ச்சி, நியமனம், நிர்வாகம் ஆகிய முழு போக்கிலும் விசுவாசம், தூய்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகிய வரையறைகளைப் பின்பற்ற வேண்டும்.

சீனக் கலாசாரத்திலிருந்து தோன்றி காலத்தின் தேவைக்குப் பொருந்திய திறன் மிக்கவர் தேர்வு முறையானது, சீனாவின் நவீனமயமாக்கலுக்கும் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்கும் உறுதியான திறன் மிக்கவர் ஆதாரம் அளித்து வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author