இஸ்ரேல் நாட்டிற்கும் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ள நிலையில் தற்போது, இஸ்ரேல் தனது தெற்கு எல்லையான லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஏற்கனவே கடந்த தாக்குதலின் போது ஹிஸ்புல்லா அமைப்பின் வாக்கி டாக்கி,பேஜர்கள் போன்றவை வெடித்து சிதறியதில் பலர் இறந்துள்ளனர். இந்நிலையில் தற்போது இஸ்ரேல் லெபனான் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 1200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இறப்பின் எண்ணிக்கையும் 492 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தாக்குதலில் பல பெண்கள், குழந்தைகள் பாதிப்படைந்துள்ளனர்.லெபனான் பகுதியில் போர்க்கலவரம் அதிகமானதால் அந்நாட்டை விட்டு பலரும் வெளியேறி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு முன்னதாகவே இஸ்ரேல் லெபனான் மக்களின் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகள் மூலம் தாக்குதல்களை தெரியப்படுத்தி உள்ளது. இதில் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை வைத்த இடங்களில் தாங்கள் குண்டுவெடிப்புகள் நடத்த உள்ளதாக தெரிவித்திருந்தது என செய்திகள் வெளியாகியுள்ளன.