2025 ஐபிஎல் சீசன், கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அணிகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, நீண்ட காலமாக தனது சொந்தமாக கருதிய மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேறி, வேறு ஒரு அணிக்கு செல்லும் முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல். ராகுல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு செல்லும் வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
RCB தற்போதைய கேப்டன் டூபிளசிஸை நீக்கிவிட்டு, புதிய கேப்டனாக ராகுலை நியமிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல்லை அணியில் இருந்து நீக்கவும் RCB நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த மாற்றங்கள் ஐபிஎல் போட்டிகளில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ரோஹித் ஷர்மா போன்ற ஒரு முன்னணி வீரர் வேறு அணிக்கு செல்வது, அந்த அணியின் வலிமையை பெருக்கும்.