புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்துக்கு திடீர் உடல் நலக்குறைவு…. மருத்துவமனையில் அனுமதி…!!! 

Estimated read time 0 min read

புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம். இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவினால் ‌ அவதிப்பட்டு வந்துள்ளார்.

அதாவது கடுமையான சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.

அங்கு மருத்துவர்கள் ‌ அமைச்சரை அங்கேயே தங்கி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளனர். இதனால் அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளார்.

அவருடைய இரத்த மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் சாதாரண சளி மற்றும் காய்ச்சல் என்று தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் புதுச்சேரியில் சமீப காலமாக டெங்கு, சிக்கன் குனியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பாதிப்பு போன்றவைகள் பரவி வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author