செய்தி, ஒளிபரப்புத் துறைகளில் சீனா-ஜிம்பாப்வே இடையே ஒத்துழைப்பு

ஜிம்பாப்வே நாட்டின் விளம்பரம், செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், ஜிம்பாப்வே ஒளிபரப்பு நிறுவனம், ஹெரால்டு செய்தித்தாள் ஆகியற்றுடன் இணைந்து, சீன ஊடகக் குழுமும் 3ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மற்றும் ஜிம்பாப்வே அரசுத் தலைவர் எம்மர்சன் முனங்காக்வாவின் முன்னிலையில், இந்த ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகின.
சீனா-ஜிம்பாப்வே இடையேயான மக்கள் தொடர்பை அதிகரித்து, பாரம்பரிய நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில், கூட்டாக நிகழ்ச்சிகளைத் தயாரிப்பது, தொழில்நுட்ப பரிமாற்றம் உள்ளிட்ட துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பு மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author