அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் ஈரான் நாட்டுக்கு மிக கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஈரானின் அணு ஆயுத கனவை கைவிடவும், பேச்சுவார்த்தைக்கு முன்வரவும் வலியுறுத்தியுள்ள அவர், அமெரிக்காவின் பிரம்மாண்டமான கப்பற்படை(Massive Armada) ஈரானை நோக்கி விரைந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
USS Abraham Lincoln விமானம் தாங்கி கப்பல் தலைமையிலான இந்தப் படைப்பிரிவு, வெனிசுலாவுக்கு அனுப்பப்பட்டதை விடப் பெரியது என்றும், இது அதிக ஆற்றலுடனும் நோக்கத்துடனும் வேகமாக நகர்ந்து கொண்டிருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“ஈரான் உடனடியாக பேச்சுவார்த்தை மேசைக்கு வர வேண்டும். அணு ஆயுதம் இல்லாத, அனைவருக்கும் சமமான ஒரு ஒப்பந்தத்தைச் செய்ய இதுவே கடைசி வாய்ப்பு. நேரம் கடந்து கொண்டிருக்கிறது,” என அவர் எச்சரித்துள்ளார்.
ஈரானுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை: அணு ஆயுதப் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
