இந்தியாவின் 80வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாட்டின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) அன்று நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், சுதந்திர தின விழாவின் 80வது ஆண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதைக் குறிப்பிட்டு நாட்டு மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
மேலும், நமது நாட்டின் நீதித்துறை அமைப்பில் போதிய நிதி ஆதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் எந்தவொரு ஏழை மனிதனுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதில் நீதித்துறையினர் உறுதியோடு செயல்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
இதுவே நமது ஜனநாயகத்தின் முதன்மைப் பண்பாகும்.
பயங்கரவாதத்திற்குத் துல்லியமான பதிலடி! 80வது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை
