இந்தியாவின் வான் பாதுகாப்பு திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன ‘ஆகாஷ்-என்ஜி’ ஏவுகணையின் பயனர் மதிப்பீட்டு சோதனைகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
இந்தச் சோதனையின் போது, அதிவேகமாக வந்த பல்வேறு இலக்குகளை ஆகாஷ்-என்ஜி ஏவுகணை துல்லியமாக இடைமறித்து அழித்தது.
மிகக் குறைந்த உயரத்தில் பறந்து வரும் இலக்குகள் மற்றும் அதிக உயரத்தில் நீண்ட தொலைவில் உள்ள இலக்குகள் என அனைத்துச் சூழல்களிலும் இந்த ஏவுகணை தனது திறனை நிரூபித்துள்ளது.
இதில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை தேடு கருவி (RF Seeker) மற்றும் சக்திவாய்ந்த ‘சாலிட் ராக்கெட் மோட்டார்’ பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய வான்வெளியில் புதிய கவசம்! ‘ஆகாஷ்-என்ஜி’ ஏவுகணை சோதனை வெற்றி
