ஆக்ஸ்ட் 15ஆம் நாள் நடைமுறைக்கு வரும் சீன சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத் தொகுப்பு

Estimated read time 0 min read

ஆக்ஸ்ட் 15ஆம் நாள் சீனாவின் 4ஆவது தேசிய சூழலியல் தினமாகும். இந்நாளில் சீன மக்கள் குடியரசின் சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் சட்டத் தொகுப்பு அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது. சீனாவில் சுற்றுசூழல் சார்ந்த சட்ட அமைப்பு பதிய கட்டத்தில் காலடியெடுத்துள்ளதாகவும், சட்ட ரீதியில் மனிதர்களும் இயற்கையும் இணக்கமாக வாழ்ந்து வளரும் நவீனமயமாக்கலுக்கு மேலும் உறுதியான அடிப்படையை இட்டுள்ளதாகவும் இது காட்டுகின்றது.

இந்தச் சட்டத் தொகுப்பில், 1242 விதிகள் உள்ளடக்கிய 5 தொகுதிகள் உள்ளன. இது முந்தைய 30க்கும் அதிகமான சூழலியல் மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்கள் 100க்கும் அதிகமான நிர்வாகச் சட்ட விதிகள் மற்றும் 1000க்கும் அதிகமான பிராந்திய சட்ட விதிகளைத் தொகுத்து திருத்தியமைக்கப்பட்டது. இவ்வாண்டு மார்ச் 12ஆம் நாள் 14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தில் இது அங்கீகலிக்கப்பட்டது. சீனாவில் சட்டத் தொகுப்பு என்ற பெயரில் வெளியிடப்பட்ட 2ஆவது சட்டம் இதுவாகும்.

You May Also Like

More From Author