இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 14) வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஒரே வாரத்தில் 14.136 பில்லியன் டாலர் உயர்ந்து 707.002 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
இதற்கு முந்தைய வாரத்தில் (ஜூலை 31) நாட்டின் ஒட்டுமொத்த கையிருப்பு 10.512 பில்லியன் டாலர் உயர்ந்து 692.866 பில்லியன் டாலராக இருந்தது.
ஒரே வாரத்தில் 14 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது மிக முக்கிய வர்த்தக சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
ஒரே வாரத்தில் $14.14 பில்லியன் உயர்வு! 700 பில்லியன் டாலரைக் கடந்த இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு
Estimated read time
0 min read
