பிரதமர் மோடிக்கு முதல்வர் பரிசளித்த தடம் பெட்டகம் ; அதன் சிறப்பம்சம் என்ன?  

அரசுமுறைப்பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்தார்.
டெல்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
அப்போது பிரதரிடத்தில் முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்சா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனு அளித்தார்.
பிரதமரை சந்தித்த முதல்வர். அவருக்கு தமிழர்களையும், தமிழர் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் விதமாக ‘தடம்’ பெட்டகத்தை பரிசாக வழங்கினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author