ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக ரூ.1 லட்சம் கோடி சிறப்பு நிதியை அறிவித்தார் பிரதமர் மோடி  

Estimated read time 1 min read

தனியார் துறையின் முதலீடுகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) ஊக்குவிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி திங்கட்கிழமை ரூ. ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியத்தை (Research, Development and Innovation Fund) அறிமுகப்படுத்தினார்.
‘வளர்ச்சி அடைந்த பாரதம் 2047’ இலக்கை நோக்கிச் செல்வதற்காக, கொள்கை வகுப்பாளர்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் உலகத் தலைவர்களை ஒரே தளத்திற்குக் கொண்டுவரும் முதல் எமர்ஜிங் சயின்ஸ் டெக்னாலஜி அன்ட் இன்னோவேஷன் மாநாட்டில் (Emerging Science Technology and Innovation Conclave) பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையே (Department of Science and Technology) இந்த RDI நிதியத்தின் மைய அமைச்சகமாகச் செயல்படும்.

You May Also Like

More From Author