வருடம் தோறும் நடைபெறும் ‘சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ்’ தொடரின் மூன்றாவது சீசன், திட்டமிட்டபடி நேற்று துவங்கப்படவிருந்த நிலையில், தேனாம்பேட்டை ஹயாட் ஹோட்டலில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக இன்று (ஆகஸ்ட் 7) தொடங்குகிறது.
இந்த சுருக்கமான 9 நாட்கள் கொண்ட செஸ் தொடரில், மாஸ்டர்ஸ் மற்றும் சாலஞ்சர்ஸ் என இரண்டு பிரிவுகளாக மொத்தம் 20 வீரர்கள் பங்கேற்கின்றனர்.
ஒவ்வொரு பிரிவிலும் 10 பேர் போட்டியிட உள்ளனர்.
மொத்தமாக ரூ.1 கோடி பரிசுத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர்ஸ் பிரிவில் முதல் இடம் பெறும் வீரருக்கு ரூ.25 லட்சம், இரண்டாம் இடத்திற்கு ரூ.15 லட்சம், மூன்றாம் இடத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும்.
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று துவக்கம்
