2029ஆம் ஆண்டு உலக நீச்சல் சாம்பியன் போட்டி பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது என்று உலக நீச்சல் லீக் பிப்ரவரி 11ஆம் நாள் அறிவித்தது. இப்போட்டி பெய்ஜிங்கில் நடைபெறுவது இது முதல்முறையாகும்.
அதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு ஷாங்காய் மாநகரில் 14ஆவது உலக நீச்சல் சாம்பியன் போட்டி நடைபெற்றது.
உலக நீச்சல் சாம்பியன் போட்டி உச்ச நிலை பெரிய ரக சர்வதேச நீச்சல் போட்டியாகும். 1973ஆம் ஆண்டு முதலாவது போட்டி நடைபெற்றது.
2001ஆம் ஆண்டு முதல், 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்போட்டி நடைபெற வேண்டும் என்று தீர்மானக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.