2024 உலக வடிவமைப்பு மாநாடு தொடக்கம்

 

2024 உலக வடிவமைப்பு மாநாட்டின் தொடக்கவிழா செப்டம்பர் 27ஆம் நாள் ஷாங்காய் மாநகரில் நடைபெற்றது. ஷாங்காய் மாநகராட்சியும் யுனெஸ்கோவும் இணைந்து ஏற்பாடு செய்த இம்மாநாட்டை சீன ஊடக குழுமத்தின் ஷாங்காய் கிளை நிலையமும் ஏற்று நடத்தியது. இதில், சீன ஊடகக் குழுமத்தின் தலைவர் ஷென் ஹைய்சியோங் கலந்துகொண்டு உரைநிகழ்த்தினார்.

அவர் கூறுகையில், சர்வதேச பொருளாதார மையம், நாணய மையம், வர்த்தக மையம், கப்பல் போக்குவரத்து மையம், அறிவியல் தொழில் நுட்பப் புத்தாக்க மையம் ஆகியவற்றை ஷாங்காய் மாநகரம் உருவாக்க வேண்டும் என்று ஷிச்சின்பிங் ஊக்குவித்து வருகின்றார்.

சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தில் வழிகாட்டு மற்றும் முன்மாதிரியில் ஷாங்காய் முக்கிய பங்காற்ற வேண்டும். புதிய யுகத்தில், வடிவமைப்பு கருத்தைப் பயன்படுத்தி, நகரங்களின் வளர்ச்சிக்கான பல்வேறு துறைகளுடன் இணைந்து, வடிவமைப்புத் தொழில் துறையை வலுப்படுத்தி, உலகளாவிய கண்ணோட்டத்தை ஷாங்காய் சிறப்புகளுடன் ஒருங்கிணைத்து, சோஷலிச நவீனமயமாக்கம் வாய்ந்த சர்வதேச மாநகரின் ஈர்ப்பு வெளிகாட்டப்பட வேண்டும் என்றார் அவர்.

 

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author