சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், துணைத் தலைமையமைச்சருமான ஹே லிஃபேங் 18ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில், சீன முதலீட்டு நிறுவனத்தின் சர்வதேச ஆலோசனை கமிட்டியின் உறுப்பினருடன் சந்தித்துரையாடினார்.
அப்போது அவர் கூறுகையில், தற்போதைய சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்த அளவில் நிலைத்தன்மையுடன் புத்தாக்கம் சார் உயர்தர வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில், வெளிநாட்டுத் திறப்பை சீனா உறுதியாக விரிவாக்கி, நிதி அமைப்புமுறைச் சீர்திருத்தத்தை ஆழமாக்கும். சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக்கும், சீன முதலீட்டு நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் இந்த உறுப்பினர்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி, சீனப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் சீன-சர்வதேச பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கும் ஆக்கப்பூர்வமாக ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
