அர்னாப் புயல் காற்றின் வேகம் 200 கி.மீ. இருக்கும் என கணிப்பு!

Estimated read time 0 min read

‘அர்னாப்’ புயலின் நீடித்த காற்றின் வேகம், செயற்கைக்கோள் மதிப்பீடுகளின்படி மணிக்கு 200 கி.மீ.யை நெருங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆந்திர மாநிலம் அமலாபுரம் அருகே அர்னாப் புயலின் முன் பகுதி கரையை கடக்க தொடங்கியது. நள்ளிரவு கண் பகுதி கரையை கடந்து, அதிகாலை புயலின் பின் பகுதி கரையை கடக்கும். அடுத்த 10 மணி நேரத்தில் புயல் முழுமையாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்க துவங்கியதால் அமாலாபுரம் பகுதிகளில் 130 கிமீ வேகத்தில் சூறைக்காற்றுடன், அதித கனமழை பெய்து வருகிறது. புயலின் கண் பகுதி கடந்து, பின் பகுதி கரையை கடக்கும் போது சூறைக்காற்றின் வேகம் 180 கிமீ வேகத்தை எட்டக்கூடும்.

‘அர்னாப்’ புயலின் நீடித்த காற்றின் வேகம், செயற்கைக்கோள் மதிப்பீடுகளின்படி மணிக்கு 200 கி.மீ.யை நெருங்குவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2014 அக்டோபர் 12ஆம் தேதி விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்த ‘ஹுத்ஹுத்’ புயலின்போது, ஒரு நிமிட சராசரி நீடித்த காற்றின் வேகம் மணிக்கு 181.6 கி.மீ. எனப் பதிவானது.

Please follow and like us:

You May Also Like

More From Author