சீனாவில் கட்டப்படும் அணையால் இந்தியாவுக்கு ஆபத்தா?

Estimated read time 0 min read

அண்டை நாடான சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் உற்பத்தியாகும் யர்லுங் தசாங்போ நதி, இந்திய எல்லைக்குள் நுழையும் போது பிரம்மபுத்திரா நதி என்று அழைக்கப்படுகிறது.

இந்த நதியின் குறுக்கே இந்திய எல்லைக்கு அருகில் மோடோக் என்ற பள்ளத்தாக்குப் பகுதியில் 1,600 கோடி ரூபாய் செலவில் உலகின் மிகப்பெரிய அணையைச் சீனா கட்டி வருகிறது.

இந்த அணை கட்டப்பட்டால் இந்தியாவில் கடுமையான வெள்ள அபாயம் ஏற்படும் என்று சீன அறிவியல் அகாடமி மற்றும் யுனான் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அணையில் லட்சக்கணக்கான லிட்டர் தண்ணீர் தேக்கி வைக்கப்படும் போது, அதிக மழைக்காலத்தில் திடீரென மதகுகள் திறக்கப்பட்டால் இந்தியா மற்றும் வங்கதேசப் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்படும்.

மேலும், இப்பகுதி அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதி என்பதாலும், பனிப்பாறைகள் வேகமாக உருகி வருவதாலும் நேபாளத்தைப் போன்ற மிகப்பெரிய பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author