வந்தவாசியில் கருடசேவை வைபவம்

வந்தவாசி, செப் 29:

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் நேற்று புரட்டாசி இரண்டாம் சனிக்கிழமை இரவு வெள்ளி கருடனில் உற்சவ மூர்த்தி கோவிநாதராஜப் பெருமாள் மேளதாளத்துடன் பிரகாரத்தில் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பாகவத கோஷ்டிகள் பிரபந்த பாடல்களை பாடினர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

You May Also Like

More From Author