தென் சீன கடலில் சீனாவின் கண்காணிப்பு நடவடிக்கை

சீன மக்கள் விடுதலை படையின் தெற்கு பிரிவு, நவம்பர் 14ஆம் நாள், குண்டுவீசி விமான அணியை உருவாக்கி, தென் சீன கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டது.

பிலிப்பைன்ஸ் வெளிப்புற சக்தியுடன் இணைந்து மேற்கொண்டு வரும் கூட்டு கண்காணிப்பு நடவடிக்கை இப்பிரதேசத்தின் நிதானத்தையும் அமைதியையும் சீர்குலைத்துள்ளது.

பிலிப்பைன்ஸ் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். சீன மக்கள் விடுதலை படையின் தெற்கு பிரிவு, கண்காணித்து வந்து, தேசிய இறையாண்மையும் தென் சீன கடற்பரப்பின் அமைதியையும் உறுதியாக பேணிக்காக்கும் என்று சீன மக்கள் விடுதலை படையின் தெற்கு பிரிவின் செய்திதொடர்பாளர் தெரிவித்தார்.

சீன கடல் காவற்துறையின் கப்பல் அணி, நவம்பர் 16ஆம் நாள், சீனாவின் தியாவ்யூ தீவின் கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author