27ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று, சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தை குறியீட்டு எண், 2.88 சதவீதம் உயர்ந்து, 3087.53 புள்ளிகளில் வர்த்தகம் முடிந்தது.
கடந்த வாரத்தில், ஷாங்காய் பங்குச் சந்தை குறியீட்டு எண் மொத்தமாக 12.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தப் பதிவு, 2008ஆம் ஆண்டு நவம்பருக்கு பிறகு கடந்த 16 ஆண்டுகளில் ஒரே வாரத்திலேயே காணப்பட்ட மிக பெரிய அளவிலான உயர்வாகும்.
மேலும், கடந்த வாரம், ஷென்சென் பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 17.83 விழுக்காடு உயர்ந்து, வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான உயர்வு என்ற பதிவை உருவாக்கியது.
செப்டம்பர் 24ஆம் நாள், பல முக்கிய சாதகமான கொள்கைகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்தது, சீனப் பங்குச் சந்தைகளின் குறியீடுகள் உயர்ந்ததன் முக்கிய காரணமாகும் என்று கருதப்படுகிறது.