திருவண்ணாமலையில் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீபத் திருவிழாவில், பக்தர்கள் அண்ணாமலையார் மலை மீது ஏறிச் சென்று தீபத்தைக் காண மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
டித்வா புயல் எச்சரிக்கை மற்றும் பாறைகள் சரியும் அபாயம் குறித்து வல்லுநர் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெஞ்சால் புயலால் பெய்த வரலாறு காணாத கனமழையின் போது, அண்ணாமலையார் மலையில் மண் சரிவு ஏற்பட்டு, ராட்சதப் பாறை உருண்டு விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
இதனால், கடந்த தீபத் திருவிழாவின்போதும் மலையேறத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேற தடை
