2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்கள் கூட்டணியை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் ‘புதிய திராவிட கழகம்’ இணைந்துள்ளது.
புதிய திராவிட கழகத்தின், ‘ வெல்லட்டும் சமூக நீதி’ – ஆறாவது மாநில மாநாடு, நாளை 30/11/2025, ஈரோடு, மொடக்குறிச்சி எழுமாத்தூரில் நடைபெற உள்ளது..
மாநாட்டு ஏற்பாடுகளை, மாண்புமிகு வீட்டு வசதித் துறை அமைச்சர் அண்ணன் சு.முத்துசாமி, புதிய திராவிட கழகத்தின் தலைவர், திரு. கே.எஸ்.ராஜ்… pic.twitter.com/chC86A7eEf
— V.Senthilbalaji – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@V_Senthilbalaji) November 29, 2025
“>
இக்கட்சி சார்பில் இன்று (நவ. 30, 2025) மொடக்குறிச்சியை அடுத்த எழுமாத்தூரில் நடைபெறவிருக்கும் ‘வெல்லட்டும் சமூக நீதி’ மாநில மாநாட்டில், தி.மு.க.வின் இளைஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். மேலும், புதிய திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டருக்கு, கொங்கு மண்டலத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியை தி.மு.க. ஒதுக்கீடு செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், கொங்கு மண்டலத்தில் தி.மு.க. தன் செல்வாக்கை மேலும் விரிவுபடுத்த வியூகம் வகுப்பதாகக் கருதப்படுகிறது.
