ஆண்டுதோறும் டிசம்பர் 1 ஆம் தேதி அனுசரிக்கப்படும் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘புதிய எச்ஐவி தொற்று இல்லாத தமிழ்நாடு’ என்ற இலக்கை அடையத் தமிழக மக்களுக்குச் செய்தி வெளியிட்டுள்ளார்.
1986 ஆம் ஆண்டு சென்னையில் முதன்முதலில் எச்ஐவி கண்டறியப்பட்ட நாள் முதல், கடந்த 39 ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு வெற்றிகரமாகப் பணியாற்றி வருகிறது.
தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் (TANSACS) மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடுகளால், தமிழ்நாட்டில் எச்ஐவி தொற்றின் தாக்கம் 2002 ஆம் ஆண்டில் இருந்த 1.11 விழுக்காட்டிலிருந்து 2023-24ஆம் நிதியாண்டில் 0.16 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
இது தேசிய சராசரியான 0.23 விழுக்காட்டை விடக் குறைவாகும்.
உலக எய்ட்ஸ் நாள்: புதிய தொற்று இல்லாத தமிழ்நாடு உருவாக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
