ஆம்பூரில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த கனமழையால் சாலையில் தேங்கிய மழை நீரில் வாகனங்கள் மூழ்கியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரப் பகுதியில் திடீரென ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் மழை நீரில் மூழ்கியவாறு சென்றது. மேலும் ரெட்டி தோப்பு மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேங்கியதால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர் .
வரலாறு காணாத “ட்றபிக் ஜாம்”
பிற்பகல் 2மணி முதல் மாலை 6மணி வரை 🤔🥺 pic.twitter.com/h9CeP4KrBr
— Govindan T.s (@GovindanTs1) October 3, 2024
திடீரென பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காற்று வீசுவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் ஆம்பூர் பகுதியில் நேற்று இரவு 78 மில்லி மீட்டர் அளவிற்கு மழையானது பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.