நான் சர்வதேச கிரிக்கெட்டிற்குத்தான் முதலிடம் கொடுத்து வந்தேன் – மிட்செல் ஸ்டார்க்

Estimated read time 1 min read

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் முன்னெப்போதும் இல்லாத அதிக தொகையாக ரூ.24.75 கோடிக்கு ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (Mitchell Starc) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணியினரால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். சுமார் 6 வருட காலம் கழித்து ஐபிஎல் தொடரில் பங்கேற்பது குறித்து ஸ்டார்க்கிடம் கேட்கப்பட்டது.

அப்போது அவர் தெரிவித்ததாவது:- நான் சர்வதேச கிரிக்கெட்டிற்குத்தான் முதலிடம் கொடுத்து வந்தேன். அதிலும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அதன் மூலம் ஆஸ்திரேலியாவிற்கு என் அதிக பங்களிப்பை உறுதி செய்ய நினைத்தேன். இவ்வருட கடைசியும் அடுத்த வருடமும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டிற்கு சர்வதேச அரங்கில் ஒரு அமைதியான காலகட்டம். என் திறனை மேம்படுத்தி கொள்ள தலைசிறந்த உலக தரம் பெற்ற முன்னணி வீரர்களுடன் விளையாட இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே இப்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்க சம்மதித்தேன்” என தெரிவித்தார்.

 

 

Please follow and like us:

You May Also Like

More From Author