சாகோஸ் தீவுகளின் இறையாண்மையை மொரிஷியஸுக்கு மாற்ற பிரிட்டிஷ் அரசாங்கம் ஒப்புக்கொண்டது.
இது இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டம் தொடர்பான நீண்டகால சர்ச்சையை முடிவுக்குக் கொண்டுவருகிறது.
வியாழனன்று (அக்டோபர் 3) அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், பிரிட்டன்-அமெரிக்க இராணுவத் தளமான டியாகோ கார்சியாவின் மீது 99 ஆண்டுகளுக்கு பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருக்க வழிவகை செய்துள்ளது.
2,500 பணியாளர்கள் வசிக்கும் இந்த தளம், முக்கியமாக அமெரிக்கர்கள், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்கள் உட்பட மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் நடவடிக்கைகளுக்கு மையமாக உள்ளது.
பிரிட்டன் வெளியுறவுச் செயலர் டேவிட் லாம்மி, உலகப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், காமன்வெல்த் கூட்டாளியான மொரிஷியஸுடன் பிரிட்டனின் உறவை மேம்படுத்துவதிலும் ஒப்பந்தம் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறினார்.