இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 6.7% ஆக குறைவு  

நிதியாண்டு 2024-25 இன் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 6.7% ஆக வளர்ந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது முந்தைய 2023-24 நிதியாண்டின் முதல் காலாண்டில் பெற்ற 8.2% வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிடும்போது குறைவாகும்.
மேலும், நிதியாண்டு 2023-24இன் கடைசி காலாண்டில் 7.8% வளர்ச்சியடைந்த நிலையில், அதைவிடவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கணிப்பு முதல் காலாண்டில் 7.1% வளர்ச்சி ஆக இருக்கும் என கணித்த நிலையில், அதைவிடவும் குறைவாக உள்ளது.
இதற்கிடையே ஐசிஆர்ஏ 6% வளர்ச்சியையும், எஸ்பிஐ மற்றும் ஆனந்த் ரதி ரிசர்ச் ஆகியவை முறையே 7.1% மற்றும் 7% வளர்ச்சி விகிதத்தை கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author