கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல்மயமாக்குதல், பாதுகாத்தல் மற்றும் பொதுமக்களின் அணுகலுக்கான ஞான பாரதம் என்ற பிரத்யேக டிஜிட்டல் தளத்தை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 12) தொடங்கி வைத்தார்.
மத்திய கலாச்சார அமைச்சகத்தால் விஞ்ஞான் பவனில் ஏற்பாடு செய்யப்பட்ட ஞான பாரதம் சர்வதேச மாநாட்டில், பிரதமர் கலந்து கொண்டு கண்காட்சியையும் பார்வையிட்டார்.
இந்த மாநாட்டின் நோக்கம், இந்தியாவின் விரிவான கையெழுத்துப் பிரதி பாரம்பரியத்தை மீட்டெடுக்கவும், உலகளாவிய அறிவுப் பரிமாற்றத்தில் அதை ஒரு முக்கிய அங்கமாக நிலைநிறுத்தவும் உத்திகளை ஆராய்வதுதான்.
இந்தியாவின் அறிவு பாரம்பரியத்தைக் கையெழுத்துப் பிரதி மரபு மூலம் மீட்டெடுத்தல் என்ற தலைப்பில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த மூன்று நாள் மாநாடு, அறிஞர்கள், பாதுகாவலர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களை ஒன்றிணைக்கிறது.