தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அரபிக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாகிறது.
அதன்படி லட்சத்தீவுகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது அடுத்த 3 நாட்களில் மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்பிறகு இன்று தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பல்வேறு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.