மகா சிவராத்திரியை முன்னிட்டு, இன்று முதல் மார்ச் 10 -ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில், மகா சிவராத்திரி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. மகா சிவராத்திரியை யொட்டி, திருவண்ணாமலைக்கு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் கிரிவலம் செல்வர்.
இந்த நிலையில், மகா சிவராத்திரி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தினத்தையொட்டி, இன்று முதல் மார்ச் 10 -ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இன்று 270 பேருந்துகளும், நாளை 300 பேருந்துகளும், மார்ச் 9-ல் 430 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாகச் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும், கோயம்பேட்டில் இருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருவுக்கு நாளை, நாளை மறுநாள் 70 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.