முன்பு வெளியிடப்பட்ட கொள்கைகள், பொருளாதாரத்தை விரைவுபடுத்தியதோடு, பொருளாதாரத்தின் இயக்கத்தில் பிரச்சினையைத் தீர்க்கும் நடவடிக்கைக்களை சீனா தொடர்ந்து வழங்கி வருகிறது. சீனப் பொருளாதாரம் ஒட்டுமொத்தமாகவும், நிதானமாகவும் முன்னேறி வருகிறது. மேலும், சந்தையின் மீதான நம்பிக்கை உயர்ந்து வருகிறது.
அதே வேளையில், சீனத் தேசிய நாள் விடுமுறை காலத்தில், சீனாவின் நுகர்வு சந்தை சுறுசுறுப்பாக வளர்ந்துள்ளது. சீனச் சந்தையிலிருந்து வெளியிடப்பட்ட ஆக்கப்பூர்வமான சமிக்கைகள், பல தரப்புகளின் முயற்சிகளாகும்.
சீனப் பொருளாதாரத்தின் அடிப்படை நிலைமை மாறவில்லை. பெரிய சந்தை உறுதியான பொருளாதாரம், அதிகமான வாய்ப்புகள் ஆகியவை மாறவில்லை.
உலகில் 2ஆவது பெரிய பொருளாதார நாடான சீனாவின் பொருளாதாரம் தொடர்ந்து சீராக மாறுவது, உலகத்திற்கு நல்ல செய்தியாகும். இத்தகைய பின்னணியில், சீனப் பொருளாதாரம் சீராக வளரும் முன்னேற்றப் போக்கு, உலகப் பொருளாதார அதிகரிப்புக்கு உந்து சக்தி மற்றும் நம்பிக்கையை கொண்டு வரும்.
வெளிநாட்டுத் திறப்புப் பணியை இதேவிதாமல் விரிவாக்கும் சீன சந்தை பல்வேறு நாடுகளுக்கு வாய்ப்புகளைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.