விமான போக்குரத்துத்துறை போல், டிஜிட்டல் துறைக்கும் சர்வதேச அளவில் விதிகள் வகுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய மொபைல் காங்கிரஸ் என்ற அமைப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்பாட்டிற்கு சர்வதேச அளவில் அளவீடு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
உலக தொலைத்தொடர்பு தர நிர்ணயம் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
டிஜிட்டல் துறையில் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க இந்தியா மேற்கொண்ட வரும் நடவடிக்கைகளை பட்டியிலிட்ட பிரதமர், தொழில்நுட்பங்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும், எவ்வாறு பயன்படுத்தக்கூடாது போன்ற விதிகள் வகுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
சைபர் தாக்குதலுக்கு ஆளாகாமல் மக்களை காப்பாற்ற வேண்டியது அந்தந்த நாட்டின் கடமை என்றாலும், தொழில்நுட்பம் சார்ந்த இயங்கும் சர்வதேச அமைப்புகளும் சைபர் குற்ற தடுப்பு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.