அமைதி படகு (Peace Ark)எனும் சீன கடற்படையின் மருத்துவ மனை கப்பல் ஜுன் 16ஆம் நாள் முற்பகல் செஜியாங் மாநிலத்தின் சோ ஷானில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து புறப்பட்டு, Mission Harmony-2024 எனும் கடமையில் ஈடுபட துவங்கியது. இந்த கப்பலிலுள்ள மருத்துவர்கள், செஷெல்ஸ், தான்சானியா, மடகாஸ்கர், மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, அங்கோலா, காங்கோ குடியரசு, காபோன், கோமரூன், பெனின், மோரிடேனியா, ஜிபூட்டி, இலங்கை ஆகிய 13 நாடுகளில் பயணம் மேற்கொண்டு மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பர்.
அமைதி படகு எனும் கப்பல், சீனா சொந்தமாக வடிவமைத்து கட்டிய முதலாவது ஆழ்கடல் மருத்துவ மனை கப்பலாகும்.
இக்கப்பல் Mission Harmony-2024 கடமையில் ஈடுபடுவது, இதுவே 10ஆவது முறையாகும். இக்கப்பலில் உள்ள மருத்துவப் பணியாளர்கள், கப்பல் பயணிக்கும் அந்த நாடுகளின் பொது மக்கள், அந்நாடுகளில் உள்ள சீன முதலீட்டு நிறுவனங்களின் பணியாளர்கள், அந்நாடுகளில் வாழ் சீனர்கள் ஆகியோருக்கு இலவசமாக மருத்துவ சேவை அளிப்பார்கள்.
2008ஆம் ஆண்டு இக்கப்பல் முதன்முறையாக சேவை புரிந்தது முதல் தற்போது வரை, வெளிநாடுகளுக்கு பல முறை சென்று மனித நேய மருத்துவ சேவை அளித்துள்ளது.
45 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் பயணம் மேற்கொண்டுள்ள இக்கப்பலில் பணி புரிந்த மருத்துவர்கள், சுமார் 2 லட்சத்து 90 ஆயிரம் மக்களுக்கு சேவை புரிந்து, 1700 அறுவை சிகிச்சைகளை வழங்கியுள்ளனர்.