கர்நாடக மாநிலம் பெங்களூருவின் யெலஹங்காவில் பெய்த கன மழையால், அங்குள்ள பீனிக்ஸ் மாலில் வெள்ள நீர் புகுந்தது.
இதனையடுத்து தேங்கிய நீரை மின்மோட்டார்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் மால் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் சம்பந்தப்பட்ட பீனிக்ஸ் மால் கட்டப்பட்ட இடம் நீர் நிலைப் பகுதியா என கேள்வி எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு பெங்களூரின் வடக்கு பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு பீனிக்ஸ் மாலே காரணம் என சர்ச்சை எழுந்ததால், அதனை 15 நாட்களுக்கு மூட காவல்துறை உத்தரவிட்டது நினைவு கூரத்தக்கது,