சீனத் தேசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட தொடர்புடைய தரவுகளின்படி, இவ்வாண்டு முதல், அடிப்படை வசதி கட்டுமானத்திற்கான நாணயச் சேவை தரம் மற்றும் திறனை இவ்வங்கி பெரிதும் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இணையத்துறை, தொழில் துறையின் மேம்பாடு, நகரங்கள், வேளாண்மை மற்றும் கிராமம், தேசிய பாதுகாப்பு ஆகிய 5 துறைகளின் அடிப்படை வசதிக் கட்டுமானங்களுக்கு இவ்வங்கி ஆக்கப்பூர்வமாக ஆதரவளித்து வருகிறது. இவற்றின் அடிப்படையில் இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில், இவ்வங்கி அடிப்படை வசதிக் கட்டுமானத்திற்கு 93 ஆயிரத்து 760 கோடி யுவான் கடனை வினியோகித்துள்ளது. போக்குவரத்து, எரியாற்றல், நீர் சேமிப்பு, சரக்குப் போக்குவரத்து, தரவு மையங்கள், நகரங்களின் நிலத்தடி குழாய் வலைப்பின்னல், நகர மற்றும் கிராமப்புற வாழ்க்கை கழிவுப் பொருட்கள் மற்றும் நீர் மேலாண்மை போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு முக்கியமாக ஆதரவளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அடிப்படை வசதி கட்டுமானத்திற்கு 93760 கோடி யுவான் ஒதுக்கீடு: சீனத் தேசிய வளர்ச்சி வங்கி
You May Also Like
இயற்கை எரிவாயு உற்பத்தியில் சாதனை படைத்த சீனா
June 25, 2023
ரஷிய வெளியுறவு அமைச்சருடன் வாங் யீ சந்திப்பு
September 26, 2024
