சீனாவின் உயர்தரத் திறப்பு வாய்ப்புகளை உலகம் அனுபவிப்பதற்கான முக்கிய வாய்ப்பாக விளங்கும் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி நடைபெறவுள்ளது.
இது குறித்து சீன ஊடகக் குழுமத்தின் சிஜிடிஎன் நிறுவனம், உலகின் இணையப் பயப்பாட்டாளர்களிடம் மேற்கொண்ட பொது கருத்து கணிப்பில், நடப்பு சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி, வாய்ப்புகளைப் பகிர்ந்து கொள்வது, ஒன்றுக்கொன்று நலன் தந்து கூட்டு வெற்றி பெறுவது, உலக பொருளாதாரத்துக்கு மேலதிக உந்து சக்தியை ஊட்டுவதாக 93.2 விழுக்காட்டினர் எதிர்பார்ப்பு தெரிவித்தனர்.
சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி, உலகளாவிய சேவை வர்த்தகத் துறையின் முக்கிய மேடையாக மாறியுள்ளது என்று 89 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
பல்வேறு நாடுகள், குறிப்பாக, ஒரு மண்டலம் ஒரு பாதை முன்மொழிவின் கூட்டு கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கும், நடுத்தர, சிறிய மற்றும் துவக்கத்திலுள்ள தொழில் நிறுவனங்களுக்கும் சீனச் சந்தையில் நுழையும் அரிய வாய்ப்புகளை இப்பொருட்காட்சி, வழங்கியுள்ளது என்று 93.8 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.