பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் சீன வர்த்தக குறியீடு வெளியீடு

Estimated read time 1 min read

2025ஆம் ஆண்டு சீனாவுக்கும் பிரிக்ஸ் அமைப்பின் பிற உறுப்பு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக குறியீடு என்ற அறிக்கை சமீபத்தில் வெளியானது. அதன்படி, 2025ஆம் ஆண்டில், இந்த குறியீட்டு எண், 334.14ஆக உயர்ந்து, தொடர்ச்சியாக 10-வது ஆண்டில் ஏற்றம் கண்டுள்ளது.
2025ஆம் ஆண்டில், பிரிக்ஸ் உறுப்பினர்களுடனான சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பு 7.47 டில்லியன் யுவானை எட்டி, முந்தைய ஆண்டை காட்டிலும் 3.4 சதவீதம் வளர்ச்சியை கண்டுள்ளது.

இது, அந்த ஆண்டில் சீனாவின் மொத்த வெளிநாட்டு வர்த்தக மதிப்பில் 16.4 சதவீத பங்கை கொண்டுள்ளது.
மேலும், சீனாவில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுடன் வர்த்தகம் மேற்கொண்டுள்ள தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2025ஆம் ஆண்டில் முதல்முறையாக 3 லட்சத்தை தாண்டியது.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 8.8 சதவீதம் அதிகரித்துள்ளது.
சீனாவின் சுங்க துறைப் பொது பணியகத்தால் தொகுக்கப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த வர்த்தக குறியீடு சமீபத்தில் சீனாவின் சியாமென் நகரில் நடைபெற்ற 26ஆவது சீன சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது

You May Also Like

More From Author