சீன எல்லையைக் கடந்த பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

Estimated read time 0 min read

சர்வதேசப் பயணிகளுக்கு நுழைவு அனுமதியை எளிதாக்கும் நோக்கில் சீனா மேற்கொண்டுள்ள விசா விலக்கு கொள்கை மற்றும் இதர நடவடிக்கைகளால், இந்த ஆண்டின் முதல் 8 மாதங்களில் சீனாவுக்கான வெளிநாட்டுப் பயணங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளன.

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் வெளிநாட்டு குடிமக்கள் சீனாவின் எல்லையைக் கடந்து சுமார் 6.129 கோடி பயணங்களை மேற்கொண்டனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 19.5 சதவீதம் அதிகமாகும். இவற்றில் விசா இல்லா பயணங்கள் 2.372 கோடியாக இருந்தன. இது மொத்த பயணங்களில் 77.6 சதவீதம் வகித்து, கடந்த ஆண்டின் இதேகாலத்தை விட 26.8 சதவீதம் அதிகரித்தது.

சீனாவின் ஜியாங்சு மாநிலத்தின் லியான்யுன்காங் நகரில் நடைபெற்ற 2026 உலக பொது பாதுகாப்பு ஒத்துழைப்பு மன்றக் கூட்டத்தின் குடியேற்ற மேலாண்மை ஒத்துழைப்பு தொடர்பான துணை கூட்டத்தில் இத்தரவுகள் வெளியிடப்பட்டன.

You May Also Like

More From Author