உலகளாவிய பொது பாதுகாப்பு ஒத்துழைப்பு மன்றத்தின் 2026ஆம் ஆண்டு மாநாடு 9ஆம் நாள் ஜியாங்சு மாகாணத்தின் லியான்யுன்காங் நகரில் நடைபெற்றது. சீன அரசவை உறுப்பினரும் பொது பாதுகாப்பு அமைச்சருமான வாங் சியாவ்ஹோங் இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.
வாங் சியாவ்ஹோங் கூறுகையில், சீனா பரஸ்பர நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்புக்கு முக்கியத்துவம் அளித்து, பொது பாதுகாப்பு நிர்வாக சாதனைகள் மற்றும் அனுபவங்களை ஆக்கப்பூர்வமாக பகிர்ந்துகொண்டு, இருதரப்பு மற்றும் பலதரப்பு வாத மேடைகளின் கட்டுமானத்தை ஊக்குவித்து, உலகளாவிய பொது பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு ஞானத்தையும் வலிமையையும் பங்களித்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், சீன அரசு தலைவர் ஷிச்சினிபிங் முன்வைத்த நான்கு உலகளாவிய முன்மொழிவுகளை செயல்படுத்தவும், உலகளாவிய பொது பாதுகாப்பு நிர்வாகத்தை வலுப்படுத்தவும், உண்மையான சாதனைகளின் மூலம் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களின் நன்மைகளை மேம்படுத்தவும், அனைத்து தரப்புகளுடன் இணைந்து பணியாற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
பொது பாதுகாப்பு நிர்வாகத்தை கூட்டாக முன்னெடுத்து கொந்தளிப்பான உலகில் நிலையான ஆற்றலை வழங்குவது என்ற தலைப்பிலான இம்மாநாட்டில், சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் தலைவர், அமைதி காக்கும் விவகாரத்துக்கான ஐ.நாவின் துணைப் பொதுச்செயலாளர் ஆகியோர் உரை நிகழ்த்தினர். சில நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்த விருந்தினர்களும் இதில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினர்.
