சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், சீன அரசவையின் துணை தலைமை அமைச்சருமான ஹெலிஃபென் 20ஆம் நாள் சுவிட்சர்லாந்தின் தாவோஸ் வட்டத்தில் உலகப் பொருளாதார மன்றத்தின் 2026ஆம் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர், தாராள வர்த்தகத்துக்கு உறுதியாக ஆதரவளிப்பது, பலதரப்புவாதத்தை உறுதியாகப் பேணிக்காப்பது, ஒத்துழைப்பு மற்றும் கூட்டு வெற்றியில் ஊன்றி நிற்பது, ஒன்றுக்கொன்று மதிப்பளித்து சமத்துவம் மற்றும் கலந்தாய்வில் ஊன்றி நிற்பது ஆகிய 4 முன்மொழிவுகளை வழங்கினார்.
சீனாவின் வளர்ச்சி உலகத்துக்கு முக்கிய வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று வலியுறுத்திய அவர் கூட்டத்தின் போது சர்வதேச தொழில் மற்றும் வணிகத் துறையினர்களுடன் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டார்.
மேலும், கூட்டத்தின் போது, சுவிட்சர்லாந்தின் கூட்டாட்சி அரசுத் தலைவர் மற்றும் துணை அரசுத் தலைவரை அவர் சந்தித்து உரைநிகழ்த்தினார். சுவிட்சர்லாந்துடன் உயர் நிலை பரிமாற்றத்தை வலுப்படுத்தி இரு தரப்பின் ஒருங்கிணைப்பை ஆழமாக்கச் சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.
