2ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் நிறுவனங்கள் அதிகரிப்பு

2ஆவது சீன சர்வதேச வினியோக சங்கிலி பொருட்காட்சி பெய்ஜிங்கில் நவம்பர் 26ஆம் முதல் 30ஆம் நாள் வரை நடைபெற உள்ளது.

சீனச் சர்வதேச வர்த்தக முன்னேற்றச் சங்கத்தின் துணைத் தலைவர் சாங் ஷௌ காங், அக்டோபர் 28ஆம் நாள் நடைபெற்ற சீன அரசவையின் செய்தியாளர் கூட்டத்தில் இத்தகவலை வெளியிட்டார்.

உலகத்துடன் ஒருங்கிணைந்து, எதிர்காலத்தைக் கூட்டாகப் படைப்பது என்பது இதன் தலைப்பாகும். தொழில் மற்றும் வினியோக சங்கிலி ஒத்துழைப்பு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

சுமார் 1000க்கும் மேலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் மற்றும் வர்த்தகத் துறையின் பிரதிநிதிகள் நவம்பர் 26ஆம் நாள் முற்பகல் இப்பொருட்காட்சியின் துவக்க விழாவில் கலந்துகொள்வர்.

தடையற்ற நிதானமான உலக தொழில் மற்றும் வினியோக சங்கிலிக்கான பெய்ஜிங் ஆலோசனை இதில் வெளியிடப்படும். தவிரவும், இதன் பல்வகை நடவடிக்கைகளின் எண்ணிக்கை 300க்கு மேலாகும்.

 

You May Also Like

More From Author