சீனப் பண்பாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஆகஸ்டு முதல் நாள் வெளியிட்ட தகவலின்படி, 2025ஆம் ஆண்டின் முற்பாதியில், சீனாவில் பயணம் மேற்கொண்ட உள்நாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 328.5 கோடியை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 20.6 விழுக்காடு அதிகமாகும். பயணத்தின் செலவு 3 லட்சத்து 15 ஆயிரம் கோடி யுவானை எட்டி, 15.2 விழுக்காடு அதிகமாகும்.
மேலும், சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகரித்துள்ளது. இவ்வாண்டின் முற்பாதியில், ஷாங்காய் வழியாக சீனாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 42 லட்சத்து 48 ஆயிரத்தை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 38.5 விழுக்காடு அதிகமாகும்.
ஹாய்நான் வழியாக சீனாவுக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சத்து 63 ஆயிரத்தை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 48 விழுக்காடு அதிகமாகும். அவர்களில் விசா விலக்கு கொள்கையின் கீழ் சீனாவில் பயணம் மேற்கொண்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 89 விழுக்காடு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.