மாம்பழம் சின்னம் கிடைக்குமா…? தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதிய பாமக…!!!

மாம்பழம் சின்னம் கேட்டு பாமக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4.23 சதவிகித வாக்குகளை பெற்று அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடுகிறது.

இதனையடுத்து பாமகவுக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாமக சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சி.அன்புமணி என்பவரை பாமக களமிறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author