23வது பொம்மை பொருட்காட்சி ஷான்டோ நகரில் துவக்கம்

23வது பொம்மை பொருட்காட்சி, அக்டோபர் 25ஆம் நாள் முதல் 27ஆம் நாள் வரை சீனாவின் குவாங்டோங் மாகாணத்திலுள்ள ஷான்டோ நகரில் நடைபெறுகிறது.

இது பொம்மை தலைநகர் உலகத்தை ஈர்ப்பது என்ற கருப்பொருளைக் கொண்டு, பொம்மை தொழில் ஐபி கண்காட்சி, பொம்மை கூறுகள் கண்காட்சி, பொம்மை இயந்திர கண்காட்சி ஆகியவற்றை ஒருங்கிணைந்து, மேலும் பெரியவும், வளமானவும், வெற்றிகரமானவும் பொருட்காட்சியாக நடத்தப்படுகின்றது.

சீன பொம்மை மற்றும் பரிசு தலைநகர் என்ற பெருமையில், அது மேலதிக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகர்களை ஈர்த்து, பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை அதிகரித்து, பொம்மைகளின் பன்முக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது.

1,000க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்ற இந்த பொருட்காட்சி, 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பொம்மைகள் மற்றும் தொடர்புடைய தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்படுகின்றன. கிட்டத்தட்ட 3,000 சர்வதேச வாங்குபவர்கள் எல்லை கடந்த கொள்முதல் கூட்டங்களில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பொருட்காட்சியின் போது, சீனாவின் பிரபலமான ஐபி வீரர்கள் காட்சிப்படுத்தப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் நடைபெறும். மேலும் 120 மீட்டர் நீளமுள்ள ரூபிக் கனச்சதுரத் துண்டுகளால் உருவாக்கிய சுவர் கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author