சீனாவில் உயர் தொழில்நுட்ப உற்பத்தி தொழிற்துறையின் வளர்ச்சி

சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம் 27ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமானமுடைய தொழில் நிறுவனங்களின் மொத்த லாபம், 5 இலட்சம் கோடி யுவானைத் தாண்டியுள்ளது.

இதில் உயர் தொழில்நுட்ப உற்பத்தி தொழிற்துறை உருவாக்கிய லாபம் வேகமாக வளர்ந்துள்ளது. சீனாவின் தொழிற்துறை பொருளாதார வளர்ச்சியின் உறுதித்தன்மையைக் காட்டியுள்ளது.

புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் 3 காலாண்டுகளில் உயர் தொழில்நுட்ப உற்பத்தி துறையின் லாபம், ஆண்டுக்கு 2 கோடி யுவானுக்கு அதிகமான வருமான முடைய தொழில் நிறுவனங்களின் சராசரி நிலையை விட 9.8 சதவீத புள்ளிகள் அதிகம்.

இதனால் இந்த நிறுவனங்களின் லாபம் 1.1 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது. முதல் 3 காலாண்டுகளில் சீனாவின் உயர் தொழில்நுட்ப உற்பத்தி துறையின் முதலீட்டுத் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 10 விழுக்காடு அதிகமாகும்.

உயர்தர உற்பத்தி திறனின் வளர்ச்சி பயனுள்ள முறையில் முன்னேறி வருகின்றது. சீனாவின் உற்பத்தி தொழிற்துறை, உயர்நிலை, நுண்மதி மற்றும் பசுமைமயமாக்கத்தை நோக்கி, தொடர்ந்து ஆழமடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author