விஜய்யின் தவெக கட்சியால் அதிமுகவின் வாக்குகள் சரியாது என அக்கட்சி பொதுச்செயலாள எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னையில் 9 விளையாட்டு திடல்களை தனியார்மயமாக்கும் முடிவு கண்டிக்கத்தக்கது. அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் . கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழங்க வேண்டும்.
ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும் தேர்தலுக்கும் இன்னும் நேரம் இருக்கிறது. விஜய் தனது கருத்தை கூறியிருப்பது அவருடைய சுதந்திரம். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. விஜர் கட்சியுடன் கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும் சமயத்தில் பேசுவது தான் சரியாக இருக்கும். அதிமுக சிறப்பாக செயல்படுகிறது என்பதால் தான் விஜய் அதிமுக குறித்து பேசவில்லை. அதிமுகவை பொறுத்தவரை கூட்டண் என்பது வேறு, கொள்கை என்பது வேறு.. எங்கள் கட்சியின் கொள்கைப்படிதான் நாங்கள் செயல்படுவோம். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொள்கையே கிடையாது. திமுக – பாஜக இடையே மறைமுக ஒப்பந்தம் உள்ளதாக அனைவரும் பேசத்தொடங்கிவிட்டனர். அதிமுகவின் வாக்குகளை யாராலும் ஈர்க்க முடியாது. எம்.ஜி.ஆர் பெயரை சொன்னால் தான் அரசியல் செய்ய முடியும் என்கிற சூழல் நிலவுகிறது. அந்த அளவிற்கு எங்கள் தலைவர்கள் வாழ்ந்தார்கள்” என்று தெரிவித்தார்.